Skip to main content

Posts

குட்டி தேவதை Little Angel

பிரதமையில் பிறந்த‌ முழு நிலா... நாவுக்கரசர் போல் நானிலம் மகிழ்விக்க‌ அருள்மொழியாய் அகிலம் ஆள‌ ஒளி போல் எங்கும் பரவும் ஒலி உடையாள் முதல் தொடுதலில் முற்றும் துறக்க வைக்கும் அவள் ஆதிரை...

வெள்ளையனே வெளியேறு Vellaiyane Veliyeru - Quit India

வெள்ளையனே வெளியேறு அந்தகாலம் வெள்ளையனே முதலீட்டுடன் உள்ளே வா இந்தகாலம்* *முதலில் முதலைகளை கவனி   வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து 70 ஆண்டு ஆகிறது,! மான்சண்டோவே இந்தியாவை விட்டு வெளியேறு! (Quit Mansando!) பன்னாட்டு நிறுவனப் பிடியில் பாரத விவசாயம் ஏன்? (வெள்ளையனே வெளியேறு தினத்தன்று (09 ஆகஸ்ட் 2011 ) நாடு தழுவிய இயக்க/செயல்திறன் நாள் மற்றும் உழவர் சுயராஜ்ஜிய வாரம் (09 - 15) ஆகஸ்ட் 2011 ) மான்சாண்டோ என்னும் விவசாயக் கம்பெனியைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ, பல்வேறு சூழ்ச்சிகளையும் குறுக்கு யுக்திகளையும் கையாண்டு உலகிலேயே மிகப் பெரிய விதைக் கம்பெனியாக வளர்ந்துள்ளது. இதன் வருட லாபம் சுமார் 22500 கோடி ரூபாய்! கிட்டத்தட்ட 48 நாடுகளின் GDP யை விட இது அதிகமாகும் என்றால் இதன் பலத்தை நீங்களே யூகித்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் பல கிரிமினல் குற்றங்களுக்கும் குயுக்திகளுக்கும் பெயர் போனது மன்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல், தன உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல், அனுமதிகளுக்காக சட்ட அரசாங்க அலுவலர்கள...

திருமண அழைப்பு - Wedding Invitation

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருவாள்..! பெருமா மதிப்புடையீர் எம்மை வாழ்த்த வருவீர்..!                                                                  - குறுந்தொகை (பாலை திணை) To render help for those who are seeking it, To enjoy the life as it comes and To serve poor people as much as we can Today one fine mellow heart teams with me - To make our life more meaningful and joyful; We cardinally invite you to wish us To enjoy the freshness of new life and love. Program: Feb 6th : Reception : 7.00 - 8.00 PM Dinner : 8.00 PM Feb 7th: Muhurtham: 6.00 - 7.30 AM Venue: P.K.T.K Kalyana Mandapam, (Near Keera Mandapam), Kancheepuram http://maps.google.co.in/maps?q=kanchipuram&um=1&ie=UTF-8&hq=&hnear=Kanchipuram,+Tamil+Nad...

பொங்கல் வாழ்த்து Pongal Vazhthu

Pongal Vazhthu விவசாயம் தழைத்திட விஞ்ஞானம் படித்திடுவோம் இயற்கை பயிர் இளைஞர்களிடம் விதைத்திடுவோம் ஏர் கொண்டு மக்கள் மனதில் உழுதிடுவோம் வெள்ளை அரசியலெனும் விஷச் செடி களையெடுப்போம் மரம் மாடு செடி கொடியென‌ உரம் செய்வோம் உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை அறுவடை பண்ணுவோம் சோறு படைக்கும் விவசாய சாமிக்கு இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு மாற்று கொணர்வோம் விளை நிலம் சார்ந்தே திட்டங்கள் விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில் கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம் பயிர் காப்பீடு இன்பம் சுவைத்திடுவோம் அணை உயர்த்தலாம்! ஆற்றை அகழலாம் ! ஆபத்து கரை(றை) தாண்டா தடுத்திடுவாம் பாரம்பரிய நெட்டை பயிர் விளைத்து மழை அரசியல் விழுங்கிடா வேலியிடுவோம் கொள்முதலை நேர் செய்து தரகர்களை இடைமறித்து ஏற்றுமதி இறக்குமதி சீர் செய்து மக்களை நிமிரச் செய்குவோம்... தகவல் நுட்பம் கொண்டு நீர் பாசனம் இயற்கை துணை உடன் உரம், உயிர்கொல்லி பூமி தாயின் தன்மையறிந்து பயிர் பிள்ளை செய்திடுவோம் ஓர் புரட்சி மெய் வறுத்தி உணவு படைக்கும் உழவனின் உள்ளம் மகிழ, வீட்டில் தானாக பொங்கல் பொங்க‌ கை குவிப்ப...