Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம்

kaalan

காதல் கூற‌ காலம் தாழ்த்தியதோ காதல் கூறி காத்தி றாததோ காலனான தென் காதலுக்கு.....

வலி Vali

இடுப்பு வலிக்கையில்  காலால் உதைக்கும் சுட்டி  குழந்தை... எத்தனை சுகம்  அத்தனை வலியிலும்...

என் கோபம்

என் கோபம் எனை மட்டும் தாக்கும் என்றிருந்தேன்... உண்மைதான் கோபத்தின் மௌனம் குறி வைத்தது எனை சூழ்ந்திருக்கும் எத்தனை எத்தனை (கதை) மாந்தர்களை..?

அக்கறை

இன்றைய பயணத்தில் என்னைத் தொடர்ந்த மேகத்திற்கு நன்றி. நிழலுடன் ஒரு கவிதை தந்தமைக்காக... ஏன் "அவளின் பயணம்" என கேட்கலாம், தவிர்க்க நினைத்தாலும் மறக்காமல் ஒட்டிக்கொள்ளும் வார்த்தை "அவள்"... என் செய்ய... நிழல் தர என்னைத் தொடரும் மேகம் போல் அவளின் பயணம்... தூக்கம் வராத நேற்றைய இரவின் காட்சியானது " நான் மகான் அல்ல" . தந்தையின் மறைவினால் வருந்தி தமையன் பாடுவதாக வரும் வரிகள்... அழக்கூடாது என அறிவுரை கூறி - இன்று நான் அழ காரணம் ஆகினாய்...

மதம் நெரிசலில்

என் கழுத்தின் கருப்பு கயிற்றையும் அவளின் சிலுவையையும் கட்டி விளையாடும் சிறு குழந்தை நெற்றிஇடித்து முகம் நிறையும் குங்குமம் நெரிசலான பேருந்து பயணத்தில்...

அதிஷ்டம்

எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பாராது கிடைத்த இரு இட்லிக்காக மகிழ்கிறேன் - மேலும் ஒன்று கேட்கையில் தீர்ந்த போது ...

விலைவாசி

பயணச் சீட்டிற்கு பணமில்லா நாளொன்றில் பாதி ஊர்வலத்தில் பங்குபெற்றேன் விலைவாசி உயர்வை எதிர்த்து...

தெரிந்த முகம்

பெயர் தெரியவில்லை ஊர் தெரியவில்லை எங்கே பார்த்தோம் என்றும் நினை வில்லை... முகம் மட்டும் தெரிகிறதென் அகத்திற்கு... மறந்தும் மறக்கவில்லை நான்... இருந்தும் இல்லையென‌ இயம்பியது முகம்... எதுவும் கேட்கவில்லை முகம் மட்டும் தெரிகிறதென் அகத்திற்கு...

பசி Hunger

காம்பென என் கைவிரல்களை சூப்புகையில் என் கடை நரம்பும் உணர்ந்தன உன் பசியை - நெரிசலான ஒரு பேருந்து பிரயாணத்தில்