Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

வெள்ளையனே வெளியேறு Vellaiyane Veliyeru - Quit India

வெள்ளையனே வெளியேறு அந்தகாலம் வெள்ளையனே முதலீட்டுடன் உள்ளே வா இந்தகாலம்* *முதலில் முதலைகளை கவனி   வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து 70 ஆண்டு ஆகிறது,! மான்சண்டோவே இந்தியாவை விட்டு வெளியேறு! (Quit Mansando!) பன்னாட்டு நிறுவனப் பிடியில் பாரத விவசாயம் ஏன்? (வெள்ளையனே வெளியேறு தினத்தன்று (09 ஆகஸ்ட் 2011 ) நாடு தழுவிய இயக்க/செயல்திறன் நாள் மற்றும் உழவர் சுயராஜ்ஜிய வாரம் (09 - 15) ஆகஸ்ட் 2011 ) மான்சாண்டோ என்னும் விவசாயக் கம்பெனியைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ, பல்வேறு சூழ்ச்சிகளையும் குறுக்கு யுக்திகளையும் கையாண்டு உலகிலேயே மிகப் பெரிய விதைக் கம்பெனியாக வளர்ந்துள்ளது. இதன் வருட லாபம் சுமார் 22500 கோடி ரூபாய்! கிட்டத்தட்ட 48 நாடுகளின் GDP யை விட இது அதிகமாகும் என்றால் இதன் பலத்தை நீங்களே யூகித்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் பல கிரிமினல் குற்றங்களுக்கும் குயுக்திகளுக்கும் பெயர் போனது மன்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல், தன உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல், அனுமதிகளுக்காக சட்ட அரசாங்க அலுவலர்கள...

இடைத்தேர்தல்

இலவசங்களுக்கு இணைப்பாகும் ஓட்டு குவியலுக்கிடையே ‍இன்னும் ஒட்டிக் கிடக்கின்றது நம் ஜன நாயகத்தின் உயிர்... உழுபவனின் வயிற்றைப் போல... நெய்பவனின் ஆடையைப் போல... இடைத்தேர்தல் இடை திரைப்படப் பாடலுக்கிடையிடையே தோன்றுவது போல‌ நடக்கிறது... கட்சித் தாவல்கள் நம் மூதாதையோர்களின் எஞ்சிய‌ மரபணு படுத்தும் பாடு... முறைப்படி கொள்முதலாகா நெற்களஞ்சியம் விற்கப்படுகிறது ரூபாய்க்கு... ஊருக்கு பொதுவாகவொரு தொலைக்காட்சி எனும் நிலைமாறி வீட்டிற்கொன்றென சமத்துவம் பேசுகிறது... ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே மருத்துவம் தேவைப்படுவதால் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தனியாரை நாடிச் செல்லுமாறு*... ஓட்டுப் பதிவு வீதம் அதிகரிக்க... ஜன நாயகம் உயிர்த்தெழ... மக்களோடு மக்களாக‌ எட்டே கோடியில் வீடுகட்டி வாழும் ஏழைப் பங்காளனுக்கு மறந்தும் வாக்களிப்பீர்... * விதிமுறைகளுக்கு உட்பட்டது...

தேர்தல்

தூரத்தில் ஓடுகிறான் ஒருவன்... எதற்காக ...? தண்ணீர் தேடி ..! தாயைக் காண ..! காதலைக் கூற ..! தன் மழலையைப் பார்க்க ..! எதற்காக ... யாரோ வோட்டு கேட்டு வர்ராங்களாம் ...

தமிழினத் தலைவர்

காஞ்சீபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் முகத்தையும் மனதையும் கண்டு எழுந்த போலிக் கோபத்தில் எழுதிய சில வரிகள்... தலைவா எங்களுக்கு வழிகாட்டுங்கள்... அனுமன் போல் சென்று இலங்கையை எ( தி ) ரிக்கிறோம்... எங்கள் நெருப்பு தீயவர்களை மட்டும் சுடும்... நம்பிய தொண்டனை வழிநடத்துவான் நல்ல தலைவன்... தமிழினத் தலைவரெனப் படுபவரே வழி தெரியாமல் விழிக்காதீர்... என் செய்வதென்று கை விரிக்காதீர்... உங்களால் முடியும் எங்கள் இரத்தங்களை கண்டு கண்ணீர் விடவும்... நாங்கள் உணவின்றி இறக்கையில் ஒரு வேலை உணவை துறக்கவும்... எங்கள் ஓலங்களுக்கு நடுவே தந்தி கம்பிகளை மீட்டவும்... மட்டுமே முடியும்... மிஞ்சினால் மனிதச் சங்கிலியும், கடை அடைப்பும்... சிங்கத் தமிழர்களின் உயிர்க் காற்று சிங்கள அரசை அசைக்கிறதோ இல்லையோ தெரிந்தோ தெரியாமலோ தமிழக அரசின் நாற்காலியை ஆட்டம் காணச் செய்து விட்டது... குடும்பத்தையே தாண்டிவர இயலா குரலூவியத்தின் அறிக்கை "தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்தென்றால் நான் போராடுவேன்" எங்களின் ஆழ்ந்த துக்கத்திலும் சற்றே நகைப்பைத் தருகிறது... நன்றி மதுரை மைந்தனின் பா...