Skip to main content

Posts

Showing posts with the label Independence

வெள்ளையனே வெளியேறு Vellaiyane Veliyeru - Quit India

வெள்ளையனே வெளியேறு அந்தகாலம் வெள்ளையனே முதலீட்டுடன் உள்ளே வா இந்தகாலம்* *முதலில் முதலைகளை கவனி   வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து 70 ஆண்டு ஆகிறது,! மான்சண்டோவே இந்தியாவை விட்டு வெளியேறு! (Quit Mansando!) பன்னாட்டு நிறுவனப் பிடியில் பாரத விவசாயம் ஏன்? (வெள்ளையனே வெளியேறு தினத்தன்று (09 ஆகஸ்ட் 2011 ) நாடு தழுவிய இயக்க/செயல்திறன் நாள் மற்றும் உழவர் சுயராஜ்ஜிய வாரம் (09 - 15) ஆகஸ்ட் 2011 ) மான்சாண்டோ என்னும் விவசாயக் கம்பெனியைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ, பல்வேறு சூழ்ச்சிகளையும் குறுக்கு யுக்திகளையும் கையாண்டு உலகிலேயே மிகப் பெரிய விதைக் கம்பெனியாக வளர்ந்துள்ளது. இதன் வருட லாபம் சுமார் 22500 கோடி ரூபாய்! கிட்டத்தட்ட 48 நாடுகளின் GDP யை விட இது அதிகமாகும் என்றால் இதன் பலத்தை நீங்களே யூகித்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் பல கிரிமினல் குற்றங்களுக்கும் குயுக்திகளுக்கும் பெயர் போனது மன்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல், தன உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல், அனுமதிகளுக்காக சட்ட அரசாங்க அலுவலர்கள...