காஞ்சீபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் முகத்தையும் மனதையும் கண்டு எழுந்த போலிக் கோபத்தில் எழுதிய சில வரிகள்... தலைவா எங்களுக்கு வழிகாட்டுங்கள்... அனுமன் போல் சென்று இலங்கையை எ( தி ) ரிக்கிறோம்... எங்கள் நெருப்பு தீயவர்களை மட்டும் சுடும்... நம்பிய தொண்டனை வழிநடத்துவான் நல்ல தலைவன்... தமிழினத் தலைவரெனப் படுபவரே வழி தெரியாமல் விழிக்காதீர்... என் செய்வதென்று கை விரிக்காதீர்... உங்களால் முடியும் எங்கள் இரத்தங்களை கண்டு கண்ணீர் விடவும்... நாங்கள் உணவின்றி இறக்கையில் ஒரு வேலை உணவை துறக்கவும்... எங்கள் ஓலங்களுக்கு நடுவே தந்தி கம்பிகளை மீட்டவும்... மட்டுமே முடியும்... மிஞ்சினால் மனிதச் சங்கிலியும், கடை அடைப்பும்... சிங்கத் தமிழர்களின் உயிர்க் காற்று சிங்கள அரசை அசைக்கிறதோ இல்லையோ தெரிந்தோ தெரியாமலோ தமிழக அரசின் நாற்காலியை ஆட்டம் காணச் செய்து விட்டது... குடும்பத்தையே தாண்டிவர இயலா குரலூவியத்தின் அறிக்கை "தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்தென்றால் நான் போராடுவேன்" எங்களின் ஆழ்ந்த துக்கத்திலும் சற்றே நகைப்பைத் தருகிறது... நன்றி மதுரை மைந்தனின் பா...