Pongal Vazhthu
விவசாயம் தழைத்திட
விஞ்ஞானம் படித்திடுவோம்
இயற்கை பயிர் இளைஞர்களிடம்
விதைத்திடுவோம்
ஏர் கொண்டு மக்கள் மனதில்
உழுதிடுவோம்
வெள்ளை அரசியலெனும் விஷச் செடி
களையெடுப்போம்
மரம் மாடு செடி கொடியென
உரம் செய்வோம்
உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை
அறுவடை பண்ணுவோம்
சோறு படைக்கும் விவசாய சாமிக்கு
இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு
மாற்று கொணர்வோம்
விளை நிலம் சார்ந்தே திட்டங்கள்
விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில்
கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம்
பயிர் காப்பீடு இன்பம் சுவைத்திடுவோம்
அணை உயர்த்தலாம்! ஆற்றை அகழலாம் !
ஆபத்து கரை(றை) தாண்டா தடுத்திடுவாம்
பாரம்பரிய நெட்டை பயிர் விளைத்து
மழை அரசியல் விழுங்கிடா வேலியிடுவோம்
கொள்முதலை நேர் செய்து
தரகர்களை இடைமறித்து
ஏற்றுமதி இறக்குமதி சீர் செய்து
மக்களை நிமிரச் செய்குவோம்...
தகவல் நுட்பம் கொண்டு நீர் பாசனம்
இயற்கை துணை உடன் உரம், உயிர்கொல்லி
பூமி தாயின் தன்மையறிந்து பயிர் பிள்ளை
செய்திடுவோம் ஓர் புரட்சி
மெய் வறுத்தி உணவு படைக்கும்
உழவனின் உள்ளம் மகிழ, வீட்டில்
தானாக பொங்கல் பொங்க
கை குவிப்போம் கை கொடுப்போம் ...
பிரமாதம் - அருமை - வரவேற்கத்தக்க கவிஞனின் கற்பனை - உங்கள் கற்பனை நிஜமாக வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே...
ReplyDeleteMigavum pramatham arumaiyana varthaigal!
ReplyDelete