Monday, October 25, 2010

குழந்தை எழுத்து

நான்கு "A"
நான்கு "B" பிறகே "C" வருகிறது
அதுவும் நான்கு முறை வந்து
அடுத்த எழுத்துக்கு செல்கிறது...

நான் கைபிடித்து எழுதுகையில்
என் கைபிடித்து கற்றுத்தரும்
குழந்தை...

என் கோபம்

என் கோபம்
எனை மட்டும் தாக்கும்
என்றிருந்தேன்... உண்மைதான்

கோபத்தின் மௌனம்
குறி வைத்தது
எனை சூழ்ந்திருக்கும்
எத்தனை எத்தனை
(கதை) மாந்தர்களை..?

Thursday, October 14, 2010

அறியா காதல்

உதடு சுழித்து ஊதுகிறாய்
பென்சில் சில்லுகளை
பெண்ணே சில்லென்ற கை கொண்டென் கண் திறந்து,
என் ஆவி எரிகிறது
உன் வாய் மொழிந்த ஆக்சிஜன் கொண்டு

கண்கள் மூடின தானாக உந்தன்
நேர்பார்வை எதிர்க்காமல் ,
பென்சில் மேல் பழி செய்து

பெண்ணே உன்
கண் பாய்ந்தால் நெஞ்சத்தில்
காதல் பதியமாகும்

I love u சொல்ல வந்தேன்
Eye கொடுத்த நம்பிக்கையில்
அர்த்தமற்ற புன்னகை உதிர்த்து
அர்த்தம் புரியலன்னு
சொல்லி சென்றாய்
தந்தைக்கு transfer என்று

கடல் கூட துட்சம் ஆகும் என்
காதல் தாகத்திற்கு
கண்ணீரே மிச்சம் ஆனது
கண்ணே நீ சென்ற பிறகு

நாத்திகம் மறந்து போனேன்,
நாட்கள் பல கழித்து
நானுனை கண்டதுமே...


குறிப்பு:
இது என் முதல் முயற்சி. நண்பனிடம் கதை கேட்டு காட்சிகளுக்கு கவிதை எழுதுவது.
முடிந்த மட்டும் முயன்றிருக்கிறேன், முறையற்ற பிழைகளை முறையே கண்டித்திடுங்கள் களைந்திட...

Wednesday, October 6, 2010

அவளின் முத்தம்

ஆயிரம் ஒத்திகைகள்
இப்படித்தான் கூற வேண்டுமென
அவளிடம்...
அத்தனையும் தெரிவித்தாள்
அழகிய
சிறு முத்தத்தால்
சப்தமின்றி...

Monday, October 4, 2010

ஒளி காற்று

மயக்கும் மாலைப்பொழுது
மாடங்கள் அடைக்கப்படுகின்றன
மின்சாரம் வந்ததாம்...

காதல் சாமிகள்

அவள் பார்க்கையில் அவனும்
அவன் பார்க்கையில் அவளும்
அம்மனை பார்க்கின்றனர்...