Tuesday, May 22, 2012

காலம் TIME



இப்போதே இன்றேல் எப்போதோ...?

கவிதை யாயினும் கணிணிப் பணியாயினும்
பொறி தோன்றியதும் வரைவெடுத்திடு

எத்தனை வரிகள் என்பதைவிட‌
எத்தனை வேகம் என்பதே
சிறந்த scriptஐ தீர்மானம் செய்யும்...

உலகம் சுருங்கியது
தொலைவினால் அல்ல‌
நேரத்தினால்...

கணிணி யுகத்தில்
நேரம் மில்லி, மைக்ரோ, நானோ கடந்து பிகோ வரை
பகுக்க
நாம் இன்னும் ஆமை முயல் கதைக்கிறோம்...

வானவியலில் நேரத்தை கணக்கிட்டு
தூரத்தை அளக்கிறோம்...
கானவியலில் இசை கோர்ப்பு
நேர இடைவெளிகளுக்கேற்ற
ஒலி கற்றைகளின் சேர்ப்பு...

ஒன்றையொன்று முந்த
ஓடும் முட்களை
நாமும் துரத்துவோம்...
காலத்தை வென்றிடுவோம்...

Monday, March 26, 2012

விளம்பர உத்தி Ad sense

விளம்பர உத்தி 
டாஸ்மாக் கடை முன்
அடகு கடை விளம்பரம்

------

நதிகளை இணைப்போம்
நாடு வளம் காப்போம்
மண் லாரி வாசகம்

Monday, February 27, 2012

குட்டி தேவதை Little Angel


பிரதமையில் பிறந்த‌
முழு நிலா...

நாவுக்கரசர் போல்
நானிலம் மகிழ்விக்க‌

அருள்மொழியாய்
அகிலம் ஆள‌

ஒளி போல் எங்கும் பரவும்
ஒலி உடையாள்

முதல் தொடுதலில்
முற்றும் துறக்க வைக்கும்

அவள்
ஆதிரை...

Wednesday, January 25, 2012

உள்ளம்


மூளைக்கும் இதயத்திற்கும்
பாலம் அமைத்து
உலா வரும்
உணர்வுகள் தான்
உள்ளமோ.?