Friday, January 28, 2011

திருமண அழைப்பு - Wedding Invitation






ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருவாள்..!
பெருமா மதிப்புடையீர் எம்மை வாழ்த்த வருவீர்..!
                                                                 - குறுந்தொகை (பாலை திணை)
To render help for those who are seeking it,
To enjoy the life as it comes and
To serve poor people as much as we can
Today one fine mellow heart teams with me -
To make our life more meaningful and joyful;
We cardinally invite you to wish us
To enjoy the freshness of new life and love.


Program:
Feb 6th :
Reception : 7.00 - 8.00 PM
Dinner : 8.00 PM
Feb 7th:
Muhurtham: 6.00 - 7.30 AM

Venue:
P.K.T.K Kalyana Mandapam, (Near Keera Mandapam),
Kancheepuram

http://maps.google.co.in/maps?q=kanchipuram&um=1&ie=UTF-8&hq=&hnear=Kanchipuram,+Tamil+Nadu&gl=in&ei=ULRCTajqGsaGrAffh6Ey&sa=X&oi=geocode_result&ct=image&resnum=1&ved=0CC0Q8gEwAA

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்து Pongal Vazhthu

Pongal Vazhthu



விவசாயம் தழைத்திட
விஞ்ஞானம் படித்திடுவோம்

இயற்கை பயிர் இளைஞர்களிடம்
விதைத்திடுவோம்
ஏர் கொண்டு மக்கள் மனதில்
உழுதிடுவோம்
வெள்ளை அரசியலெனும் விஷச் செடி
களையெடுப்போம்

மரம் மாடு செடி கொடியென‌
உரம் செய்வோம்

உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை
அறுவடை பண்ணுவோம்

சோறு படைக்கும் விவசாய சாமிக்கு
இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு
மாற்று கொணர்வோம்

விளை நிலம் சார்ந்தே திட்டங்கள்
விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில்

கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம்
பயிர் காப்பீடு இன்பம் சுவைத்திடுவோம்

அணை உயர்த்தலாம்! ஆற்றை அகழலாம் !
ஆபத்து கரை(றை) தாண்டா தடுத்திடுவாம்

பாரம்பரிய நெட்டை பயிர் விளைத்து
மழை அரசியல் விழுங்கிடா வேலியிடுவோம்

கொள்முதலை நேர் செய்து
தரகர்களை இடைமறித்து
ஏற்றுமதி இறக்குமதி சீர் செய்து
மக்களை நிமிரச் செய்குவோம்...

தகவல் நுட்பம் கொண்டு நீர் பாசனம்
இயற்கை துணை உடன் உரம், உயிர்கொல்லி
பூமி தாயின் தன்மையறிந்து பயிர் பிள்ளை
செய்திடுவோம் ஓர் புரட்சி

மெய் வறுத்தி உணவு படைக்கும்
உழவனின் உள்ளம் மகிழ, வீட்டில்
தானாக பொங்கல் பொங்க‌
கை குவிப்போம் கை கொடுப்போம் ...

Sunday, January 2, 2011

மூளை மழுங்கல் - Brain fading

மூளை மடிப்புகள்
மறையச் செய்தாள்
வலப் பக்கம் மட்டும் சற்றே
விட்டுச் சென்றாள்
கவிதை பாடி
பிழைக்கட்டு மென...


அவளின்  பா ஆடை
போர்த்தி ஓர்
தலையணை செய்தேன் -  மடி
துயிலுவதாக
கற்பனை கொண்டேன்...
பிரிந்த பின்பும்
பிழறாத நினைவு
பெற்றேன்....

Wednesday, December 29, 2010

kaalan



காதல் கூற‌
காலம் தாழ்த்தியதோ
காதல் கூறி
காத்தி றாததோ
காலனான தென்
காதலுக்கு.....

Monday, November 8, 2010

வலி Vali

இடுப்பு வலிக்கையில் 
காலால் உதைக்கும் சுட்டி 
குழந்தை...

எத்தனை சுகம் 
அத்தனை வலியிலும்...

Monday, October 25, 2010

குழந்தை எழுத்து

நான்கு "A"
நான்கு "B" பிறகே "C" வருகிறது
அதுவும் நான்கு முறை வந்து
அடுத்த எழுத்துக்கு செல்கிறது...

நான் கைபிடித்து எழுதுகையில்
என் கைபிடித்து கற்றுத்தரும்
குழந்தை...

என் கோபம்

என் கோபம்
எனை மட்டும் தாக்கும்
என்றிருந்தேன்... உண்மைதான்

கோபத்தின் மௌனம்
குறி வைத்தது
எனை சூழ்ந்திருக்கும்
எத்தனை எத்தனை
(கதை) மாந்தர்களை..?

Thursday, October 14, 2010

அறியா காதல்

உதடு சுழித்து ஊதுகிறாய்
பென்சில் சில்லுகளை
பெண்ணே சில்லென்ற கை கொண்டென் கண் திறந்து,
என் ஆவி எரிகிறது
உன் வாய் மொழிந்த ஆக்சிஜன் கொண்டு

கண்கள் மூடின தானாக உந்தன்
நேர்பார்வை எதிர்க்காமல் ,
பென்சில் மேல் பழி செய்து

பெண்ணே உன்
கண் பாய்ந்தால் நெஞ்சத்தில்
காதல் பதியமாகும்

I love u சொல்ல வந்தேன்
Eye கொடுத்த நம்பிக்கையில்
அர்த்தமற்ற புன்னகை உதிர்த்து
அர்த்தம் புரியலன்னு
சொல்லி சென்றாய்
தந்தைக்கு transfer என்று

கடல் கூட துட்சம் ஆகும் என்
காதல் தாகத்திற்கு
கண்ணீரே மிச்சம் ஆனது
கண்ணே நீ சென்ற பிறகு

நாத்திகம் மறந்து போனேன்,
நாட்கள் பல கழித்து
நானுனை கண்டதுமே...


குறிப்பு:
இது என் முதல் முயற்சி. நண்பனிடம் கதை கேட்டு காட்சிகளுக்கு கவிதை எழுதுவது.
முடிந்த மட்டும் முயன்றிருக்கிறேன், முறையற்ற பிழைகளை முறையே கண்டித்திடுங்கள் களைந்திட...

Wednesday, October 6, 2010

அவளின் முத்தம்

ஆயிரம் ஒத்திகைகள்
இப்படித்தான் கூற வேண்டுமென
அவளிடம்...
அத்தனையும் தெரிவித்தாள்
அழகிய
சிறு முத்தத்தால்
சப்தமின்றி...

Monday, October 4, 2010

ஒளி காற்று

மயக்கும் மாலைப்பொழுது
மாடங்கள் அடைக்கப்படுகின்றன
மின்சாரம் வந்ததாம்...