அவள் சுவாசத்தால்
குளிர்ந்த குளம்பியும்
அமிழ்தாய் சுவைக்கிறது
தெளிவாய் குழம்புகிறது
மனம்...
ஒரு மருத்துவமனையின் சில பல நலம் விசாரணைகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பின் நினைவுகள்.
என் நிலையறிந்து குளம்பியின் வெப்பம் தணித்து பருக தந்தவளுக்கு நன்றியாக சிந்திய சில வரிகள்...
Wednesday, September 29, 2010
Monday, September 20, 2010
Tuesday, September 7, 2010
குழப்பம்
தொட்டால் சினுங்கியோ என் மனம்!
தொடுகிறாய் மயிலிறகால் - நீ மீண்டும்
தீண்ட இலை மடங்கா விரியவோ
இல்லையுன் ஏமாற்றம் தவிர்த்திடவோ
தொடுகிறாய் மயிலிறகால் - நீ மீண்டும்
தீண்ட இலை மடங்கா விரியவோ
இல்லையுன் ஏமாற்றம் தவிர்த்திடவோ
Friday, September 3, 2010
அக்கறை
இன்றைய பயணத்தில் என்னைத் தொடர்ந்த மேகத்திற்கு நன்றி.
நிழலுடன் ஒரு கவிதை தந்தமைக்காக...
ஏன் "அவளின் பயணம்" என கேட்கலாம்,
தவிர்க்க நினைத்தாலும் மறக்காமல் ஒட்டிக்கொள்ளும் வார்த்தை "அவள்"... என் செய்ய...
நிழல் தர என்னைத்
தொடரும் மேகம் போல்
அவளின் பயணம்...
தூக்கம் வராத நேற்றைய இரவின் காட்சியானது "நான் மகான் அல்ல".
தந்தையின் மறைவினால் வருந்தி தமையன் பாடுவதாக வரும் வரிகள்...
அழக்கூடாது என
அறிவுரை கூறி - இன்று நான்
அழ காரணம்
ஆகினாய்...
Friday, August 27, 2010
மனத் துளிகள்
என் உடனிருப்பவர்களின் ஆசைகளே
என்னைச் செலுத்தும் விசை...
தொலைவிலொரு புள்ளி
நோக்குகையில் நெருங்குகிறது...
நெருங்குகையில் விலகுகிறது...
மதம் மாற சட்டம்
வகை செய்யும்...
சாதிகள் மட்டுமென்ன
குற்றம் செய்தனவோ..?
Tuesday, August 24, 2010
மனதிலே
சொல்ல நினைக்கையில்
வாய்ப்பு இல்லை
வாய்ப்பு கிடைக்கையில்
வார்த்தை இல்லை கூற...
என்னுள்ளே சிறு
எண்ணம் அது
உன்னுள்ளே உரு
பெற்றிருந்தால்
உன் உள்ளம்
ஏற்றுக் கொண்டால்...
மணம் கொள்ள
மனம் கொள்வீர்...
என் எண் சொல்கிறேன்...
என் சொல்வீரோ..!?
வாய்ப்பு இல்லை
வாய்ப்பு கிடைக்கையில்
வார்த்தை இல்லை கூற...
என்னுள்ளே சிறு
எண்ணம் அது
உன்னுள்ளே உரு
பெற்றிருந்தால்
உன் உள்ளம்
ஏற்றுக் கொண்டால்...
மணம் கொள்ள
மனம் கொள்வீர்...
என் எண் சொல்கிறேன்...
என் சொல்வீரோ..!?
Wednesday, July 28, 2010
Monday, June 7, 2010
Subscribe to:
Posts (Atom)