அகநா னூற்றின் வழி பற்றி அகம் உடையார் கைப் பற்றி அவ்வப்போது கர்வமெனும் களை பறித்து அளவான பொய்கள் பல பெற்றெடுத்து அழகான காதல் கலை கற்றிடுவீர் அற்புதமான காதல் கதிர் வளர்த்திடுவீர்
என் கழுத்தின் கருப்பு கயிற்றையும் அவளின் சிலுவையையும் கட்டி விளையாடும் சிறு குழந்தை நெற்றிஇடித்து முகம் நிறையும் குங்குமம் நெரிசலான பேருந்து பயணத்தில்...