Monday, February 15, 2010

வினம்பரம் செய்யாதீர்

விளம்பரம் செய்யாதீ ரென செய்யும்
விளம்பரத்திற்கு அபராதம் எத்தனை...

Monday, February 1, 2010

காதல் பாடம்

கால அட்டவணை அமைத்து
காதல் சொல்கிறோம் - ஒவ்வொரு
பெண்ணு மொரு
பாடமாக - பல
தோல்விகள் கண்டு

தேர்ந்திடுவோம்
ஒன்றிலாவது...

தொகுதி மேம்பாடு

மாறிடும் பெயர்ப் பலகை
மாறாத நிழற்குடை
மாண்புமிகு ______ இன் தொகுதி நிதியால்
மேம்படுத்தப்பட்டது...

Wednesday, January 20, 2010

குழப்பம்

தரிசனம் தந்து
கல் எறிகிறாய், என்
மனமெனும் குளத்தில்..

Tuesday, January 12, 2010

கொலையின் வலி

கொலையுண்டவனின்
குழந்தையை கையில்
சுமக்கையில் உணர்கிறேன்
கொலையின் வலியை...

கொலையின் கனத்தை...

Tuesday, December 29, 2009

பேறு

தாயின் மடியில்
தவழ்ந்து
தந்தையின் தோள் மீது
வளர்ந்து
தாதி ஒருத்தியின் கை
பிடித்து
இல்லறம் களித்தேன்
போதும் - இனி
பரமனே உன்
பாதம் பற்றிடும்
பேறு ஒன்றே
வேண்டும்...

நெருக்கம்


கூடவும் இல்லை
குறையவும் இல்லை
நமக்கிடையேயான நெருக்கம்
நான் காதலை
வெளிப்படுத்திய பின்பும்...

Saturday, December 26, 2009

காதலி

என்னைத் தவிர
எல்லோர்க்கும் தெரிந்தது போல்
உணர்கிறேன் - நீ
என்னை காதலிப்பது

Tuesday, December 15, 2009

முத்தம்

சாயம் பூசிய உதடுகளால்
சிவந்தன என் கன்னங்கள்
வெட்கம்...

Wednesday, November 11, 2009

தூண்டில்

தவறுவதற்காக விடப்பட்டதோ
தவறி விழுந்ததோ
நெற்றியில் சரியும்
கற்றை முடி...

தவறாது அகப்படுகின்றன
தோகைத் தூண்டிலில்
என் கண்கள்...