Wednesday, September 29, 2010

விதி


நடக்காதென தெரிந்தும்
நம்புகிறது மனம்
நடக்கும் நிகழ்வு
நடக்காதென...


என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பியஎன் நெஞ்சத்தின் உளறல்...

கண் கட்டி வித்தை

கண்ணைக் கட்டி
துயில முயல்கிறேன்
மனதை கிளருமவள்
நினைவுகளை மறைக்க முடியாமல்...



தனியொரு பேருந்து பயணத்தின் பொழுது, தூக்கம் வராமல் மழையின் குளிரால் காதுடன் கண்ணையும் கட்டி மனதை கட்டாமல் விட்டதால் விழுந்த சில வரிகள்...
வழக்கம் போல் அவள் ஒட்டிக்கொண்டது... :)

குளம்பியகம்

அவள் சுவாசத்தால்
குளிர்ந்த குளம்பியும்
அமிழ்தாய் சுவைக்கிறது

தெளிவாய் குழம்புகிறது
மனம்...




ஒரு மருத்துவமனையின் சில பல நலம் விசாரணைகளுக்குப் பிறகு நடந்த சந்திப்பின் நினைவுகள்.
என் நிலையறிந்து குளம்பியின் வெப்பம் தணித்து பருக தந்தவளுக்கு நன்றியாக சிந்திய சில வரிகள்...

Monday, September 20, 2010

தோல்வி

தினமும் உன்னிடம்
தோற்பது மகிழ்ச்சியே
காதல் உரைத்த
தினம் தவிர...

Tuesday, September 7, 2010

குழப்பம்

தொட்டால் சினுங்கியோ என் மனம்!
தொடுகிறாய்
மயிலிறகால் - நீ மீண்டும்
தீண்ட
இலை மடங்கா விரியவோ
இல்லையுன் ஏமாற்றம் தவிர்த்திடவோ

Friday, September 3, 2010

அக்கறை


இன்றைய பயணத்தில் என்னைத் தொடர்ந்த மேகத்திற்கு நன்றி.
நிழலுடன் ஒரு கவிதை தந்தமைக்காக...
ஏன் "அவளின் பயணம்" என கேட்கலாம்,
தவிர்க்க நினைத்தாலும் மறக்காமல் ஒட்டிக்கொள்ளும் வார்த்தை "அவள்"... என் செய்ய...

நிழல் தர என்னைத்
தொடரும் மேகம் போல்
அவளின் பயணம்...



தூக்கம் வராத நேற்றைய இரவின் காட்சியானது "நான் மகான் அல்ல".
தந்தையின் மறைவினால் வருந்தி தமையன் பாடுவதாக வரும் வரிகள்...

அழக்கூடாது என
அறிவுரை கூறி - இன்று நான்
அழ காரணம்
ஆகினாய்...