Wednesday, July 28, 2010

காதலாகி

நட்பெனும் ஆரம் வரைந்து
நங்கையுன் மனதினைச் சுற்றி வந்தேன்
நானுமறியாமல் நாமுமறியாமல்
நெருங்குகையில்
நட்பைத் தொலைத்தேனோ ?!!

குழைவு

குட்டி நாய் போல்

உன்னையே சுற்றி வரும்

என் மனம்...

பிதற்றல்

உன்னிடம் மட்டுமென்
மனம் குழைகிறது
உன் மக்களைப் பார்த்தபின்
மனம் விழைகிறது
உன்னுடன் வாழ
மணம்புரிந்து ...