Thursday, May 27, 2010

ஆண்மை


ஆண்மை உணர்ந்ததும்
வெட்கம்
விலகியது
என்னிடம் ...

Monday, May 24, 2010

மண வாழ்த்து

ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே *

அகநா னூற்றின் வழி பற்றி
அகம் உடையார் கைப் பற்றி
அவ்வப்போது கர்வமெனும் களை பறித்து
அளவான பொய்கள் பல பெற்றெடுத்து
அழகான காதல் கலை கற்றிடுவீர்
அற்புதமான காதல் கதிர் வளர்த்திடுவீர்

ஈதலும்** துய்த்தலும்***
இருவரின் இல்வாழ்வாக வாழ்த்துவன்...

மணநாள் விக்ருதி வைகாசி பனிரெண்டு

----------------------------------------------------------------------
* நின்னையே யன்றி வேறுஎத்துணையும் இல்லேன்
** இரவலர்க்குக் கொடுத்தலும்
*** இன்பங்களை அனுபவித்தலும்

Tuesday, May 18, 2010

காரணம்

பசிக்கிறது
பண்பட்ட உணவும் அருகில்
புசிக்க மறுக்கும் மனம்...
ஏனென்று கேட்கிறாள்
எதுவும் தெரியாதது போல...

பார்வை

நிறம் தெரியாதஎன்
கண்களுக்கு முத்தம்
தரும்
வண்ணத்துப் பூச்சிகள்...

Monday, May 17, 2010

அன்புடன்

அவளை
அவளிடத்தில் பார்த்தது
முதல்
மதியிழந்தேன்
அவளுந்தான்...
அவசரமெனத் தெரிந்தும்
கொஞ்சம் கொஞ்சமென
அதிகம் பரிமாறினாள்...

Wednesday, May 5, 2010

மதம் நெரிசலில்

என்
கழுத்தின் கருப்பு கயிற்றையும்
அவளின்
சிலுவையையும் கட்டி விளையாடும்
சிறு குழந்தை
நெற்றிஇடித்து முகம்
நிறையும் குங்குமம்
நெரிசலான பேருந்து
பயணத்தில்...

Saturday, May 1, 2010

தல !

அவனின்
வெள்ளித்திரை
குணங்களை விட
வெளிப்படையான
வெளிப்படும் செயல்களுக்கு
அதிகம்
ரசிகர்கள்...