Monday, April 12, 2010

இருப்பு

உன் இருப்பு
உண்மையா பொய்யா
கானல் நீர் போல
பொய்த்து
மெய்யாகிறாய் - வெறும்
மெய்யாகிறாய்...

காதல் போர்

விழிக்கும் மொழிக்குமான
போரில்
உதிர்கின்றன
ஊனமான கவிதைகள்...

அதிஷ்டம்

எதிர்பார்க்கும் நேரத்தில்
எதிர்பாராது கிடைத்த
இரு இட்லிக்காக
மகிழ்கிறேன் - மேலும்
ஒன்று கேட்கையில்
தீர்ந்த போது...