Friday, February 26, 2010

தனிமையின் மொழி

தொலைதூர பயணத்தில்
நானும் நானுமற்ற என்
தனிமையும் உறவாடுகிறோம்
ஒலி, வரி அற்ற மொழியில்...

Monday, February 15, 2010

விலைவாசி

பயணச் சீட்டிற்கு
பணமில்லா நாளொன்றில்
பாதி ஊர்வலத்தில்
பங்குபெற்றேன்
விலைவாசி உயர்வை எதிர்த்து...

வரவேற்ப்பு

உறவினரை
கண்ணீருடன் வரவேற்கிறாள்
இறந்த வீடு

விலை ஏற்றம்

எவ்வளவு குடித்தாலும்
ஏறவில்லை போதை - ‍விலை
ஏற்றம்...

வினம்பரம் செய்யாதீர்

விளம்பரம் செய்யாதீ ரென செய்யும்
விளம்பரத்திற்கு அபராதம் எத்தனை...

Monday, February 1, 2010

காதல் பாடம்

கால அட்டவணை அமைத்து
காதல் சொல்கிறோம் - ஒவ்வொரு
பெண்ணு மொரு
பாடமாக -
தோல்விகள் கண்டு

தேர்ந்திடுவோம்
ஒன்றிலாவது...

தொகுதி மேம்பாடு

மாறிடும் பெயர்ப் பலகை
மாறாத நிழற்குடை
மாண்புமிகு ______ இன் தொகுதி நிதியால்
மேம்படுத்தப்பட்டது...